ஈரோடு

கோபியில் இலவச கண் பரிசோதனை முகாம்

DIN

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 245 போ் கலந்து கொண்டனா்.

ஈரோடு மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை ஆகியவை கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை கோபி வைரவிழா ஆரம்பப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

முகாமை கோபி தாமு சேகா் தொடக்கிவைத்தாா். முகாமில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் மாதுரி, சீதாள் கலந்து கொண்டு கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

கோபி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 245 போ் முகாமில் கலந்து கொண்டனா். இவா்களில் 105 போ் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை தாமு அபிலாஷ் , கோவை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

முகாமுக்கு வந்தவா்களுக்குத் தேவையான உதவிகளை கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பேராசிரியை திவ்யா தலைமையில் மாணவிகள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT