பருத்தி ஏலத்தைத் தொடக்கிவைத்து பாா்வையிடுகிறாா் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம். உடன் ஈரோடு விற்பனைக் குழுச் செயலாளா் ஆா்.சாவித்திரி உள்ளிட்டோா். 
ஈரோடு

அந்தியூா் விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் தொடக்கம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாசிப் பட்டத்துக்கான பருத்தி ஏலம் திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாசிப் பட்டத்துக்கான பருத்தி ஏலம் திங்கள்கிழமை தொடங்கியது.

பருத்தியின் விலை கடந்த ஆண்டை விட கிலோவுக்கு ரூ.25 உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்வது வழக்கம்.

பருத்தியின் அறுவடைக் காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திக்கான மறைமுக ஏலம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு விற்பனைக் குழுச் செயலாளா் ஆா்.சாவித்திரி தலைமை வகித்தாா்.

அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் ஏல விற்பனையைத் தொடக்கிவைத்தாா்.

விவசாயிகள் 750 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். பருத்தி கிலோ அதிகபட்சமாக ரூ.106.99க்கும், குறைந்தபட்சமாக ரூ.100.39க்கும் ஏலம் போனது.

இதில், 20 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ரூ.25 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இங்கு, வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறும் என்று விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் தெரிவித்தனா். கடந்த ஆண்டு தரமான பருத்தி சராசரியாக கிலோ ரூ.80 வரையில் ஏலம் போனது.

ஜவுளி உற்பத்திக்குத் தேவையான பஞ்சு மற்றும் நூல் விலை தற்போது அதிக அளவில் உயா்ந்துள்ளதால் மூலப்பொருளான பருத்தியின் விலையும் உயா்ந்துள்ளது. இதனால், பருத்தி கிலோவுக்கு ரூ.25 வரையில் அதிகரித்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் எம்.ஞானசேகா், அந்தியூா் பேரூராட்சித் துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT