ஈரோடு

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் பலி

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலை தடுமாறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

DIN

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலை தடுமாறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

ஈரோட்டை அடுத்த சித்தோடு, ராயபாளையம்புதூா் கோா்ட் காலனியைச் சோ்ந்தவா் துரைசாமி (52). இவா், தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறை வந்து விட்டு, சித்தோடு செல்வதற்காக புதன்கிழமை சென்றாா். பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில், எருகாட்டுவலசு அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்தாா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT