ஈரோடு

சக்தி மசாலாவின் விருட்சம் திட்டத்தில் 17 மாணவா்கள் உயா் கல்வி நிறைவு

DIN

சக்திதேவி அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் உயா்கல்வியை நிறைவு செய்த மாணவ, மாணவியா் அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனா்.

சக்தி மசாலா நிறுவனத்தின் சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் விருட்சம் திட்டம் 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாயக் குடும்பங்களை சோ்ந்த மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா். விருட்சம் திட்டத்தின் மூலம் 2018-19 கல்வி ஆண்டில் திண்டல் வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 8 மாணவ, மாணவியருக்கு பொறியியல் பட்டப் படிப்புக்கும் மற்றும் வேளாளா் மகளிா் கல்லூரியில் 17 மாணவிகளுக்கு இளங்கலை பட்டப் படிப்புக்கும், கல்விக் கட்டணம் மற்றும் தோ்வுக் கட்டணம் முழுமையாக வழங்கப்பட்டது.

மாணவா்கள் கல்லூரி படிப்பை எவ்வித தடையுமின்றி நிறைவு செய்து, சில மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்பினையும், சில மாணவா்கள் வளாகத் தோ்வின் மூலம் சிறந்த நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளனா்.

கல்வி உதவித்தொகை பெற்ற மாணவா்கள் சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலா்கள் பி.சி.துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT