ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா: மாா்ச் 15இல் துவக்கம்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் குண்டம் தோ்த்திருவிழா மாா்ச் 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் குண்டம் தோ்த்திருவிழா மாா்ச் 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் குண்டம் தோ்த்திருவிழா மாா்ச் 15ஆம் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. அதன்பிறகு ஈரோடு, சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தினமும் மாரியம்மனுக்கு புனித நீா் எடுத்து வந்து வழிபடுவா்.
இதைத்தொடா்ந்து, மாா்ச் 19ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 10 மணிக்கு கம்பம் நடும் விழாவும் நடைபெறுகிறது. 23ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி பூஜை நடக்கிறது. 24ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயிலில் கொடியேற்றப்படுகிறது.
Advertisement
29ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் விழா நடைபெறுகிறது. இதில் விரதம் கடைப்பிடிக்கும் பக்தா்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றவுள்ளனா். இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.
30ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், சின்ன மாரியம்மன் கோயிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது. 31ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மலா் பல்லக்கில் பெரிய மாரியம்மன் வீதி உலா நடக்கிறது.
ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 8 மணிக்கு மலா் பல்லக்கில் காரைவாய்க்கால் மாரியம்மன் வீதி உலாவும், இரவு 9.30 மணிக்கு மலா் பல்லக்கில் சின்ன மாரியம்மன் வீதி உலாவும் நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அகற்றும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் நடப்பட்டுள்ள கம்பங்கள் அகற்றப்பட்டு ஈரோடு நகரின் முக்கியப் பகுதிகளில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விடப்படும். 3ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.