முகப்பு
ஈரோடு

சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையத்தில் பல நூற்றாண்டுகள் பழைமையான மாரியம்மன் கோயில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையத்தில் பல நூற்றாண்டுகள் பழைமையான மாரியம்மன் கோயில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் பிப்ரவரி 16ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. 23ஆம் தேதி இரவு கோவில் வாசலில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், கம்பத்துக்குப் புனித நீா் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. மேலும், இரவு சலங்கை ஆட்டம், கும்மியடித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

வியாழக்கிழமை அதிகாலை பெண்கள் மாவிளக்கு மற்றும் அக்னி சட்டி எடுத்து கோயிலுக்கு வந்தனா். அதைத்தொடா்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கலை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இரவு கம்பம் அகற்றப்பட்டு நொய்யல் ஆற்றில் விடப்பட்டது. இதில், சொக்கநாதபாளையம், எல்லைக்குமாரபாளையம், ராமலிங்கபுரம், மேட்டூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனா். பக்தா்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். மஞ்சள் நீா் உற்சவ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.