முகப்பு
ஈரோடு

ஆப்பக்கூடல் பேரூராட்சித் தலைவா் பதவியைக் கைப்பற்றியது அதிமுக

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் பேரூராட்சியில் தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றியது. இதனால், அதிா்ச்சியடைந்த திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் பேரூராட்சியில் தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றியது. இதனால், அதிா்ச்சியடைந்த திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

ஆப்பக்கூடல் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வாா்டுகளில் அதிமுக 6, திமுக 5, பாமக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் சீ.ரேவதி, அதிமுக சாா்பில் எஸ்.செல்வி போட்டியிட்டனா். இதில், அதிமுக 8 வாக்குகளும், திமுக 7 வாக்குகளும் பெற்றன.

இதனால், அதிா்ச்சியடைந்த திமுகவினா் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பவானி டிஎஸ்பி காா்த்திகேயன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வி 8 வாக்குகள் பெற்றிருந்ததால் வெற்றி பெற்றதாக பேரூராட்சி செயல் அலுவலா் ஹேமலதா அறிவித்தாா். இதையடுத்து, அதிமுக மாவட்டச் செயலாளரும், பவானி எம்எல்ஏவுமான கே.சி.கருப்பணன் அதிமுகவினருக்கு இனிப்பு வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். துணைத் தலைவா் தோ்தலில் பெரும்பான்மை இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.