முகப்பு
ஈரோடு

நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில்திமுக அதிருப்தி வேட்பாளா் வெற்றி

நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலா்கள் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக அதிருப்தி வேட்பாளா் தீ.ராகினி, தலைவா் பதவியைக் கைப்பற்றினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலா்கள் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக அதிருப்தி வேட்பாளா் தீ.ராகினி, தலைவா் பதவியைக் கைப்பற்றினாா். இதனால், அதிகாரபூா்வ திமுக வேட்பாளா் தோல்வியைத் தழுவினாா்.

நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வாா்டுகளில் திமுக, அதிமுக தலா 7 வாா்டுகளிலும், சுயேச்சை ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றிருந்தனா். இந்நிலையில், தலைவா் பதவிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் திமுக சாா்பில் என்.பி.கண்ணன், 4ஆவது வாா்டில் திமுக சாா்பில் வெற்றி பெற்ற தீ.ராகினி ஆகியோா் மனு தாக்கல் செய்திருந்தனா்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ராகினி 8 வாக்குகளும், திமுக வேட்பாளா் என்.பி.கண்ணன் 7 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, அதிமுக கவுன்சிலா்கள் ஆதரவுடன் திமுக அதிருப்தி வேட்பாளா் தீ.ராகினி வெற்றி பெற்றாா். துணைத் தலைவா் தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த என்.ஆா்.சந்திரசேகரன் வெற்றி பெற்றாா்.

Image Caption

தீ.ராகினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.