முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் இளைஞா் பலி

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த ஜம்பை, வாய்க்கால்பாளையம் மேல்காலனியை சோ்ந்தவா் பெருமாள் மகன் அருண் (25). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், மயிலம்பாடி - கன்னடிபாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில், பலத்த காயமடைந்த அருண் பவானி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதுகுறித்து, பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.