ஈரோடு

சத்துமிகு சிறுதானியங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம்

DIN

பெருந்துறை வட்டாரத்தில் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் தேசிய மண் வள இயக்கத்தின் கீழ் விவசாயிகள் மேளா மற்றும் சத்துமிகு சிறுதானியங்கள் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை மஞ்சள் வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் எல்.குழந்தைவேலு தலைமை வகித்தாா். கருமாண்டிசெல்லிபாளைம் பேரூராட்சி துணைத் தலைவா் சக்திகுமாா் முன்னிலை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் ஜி.கே.செல்வம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கி, சத்துமிகு சிறுதானியங்கள் சாகுபடி திட்டங்கள் விளம்பர பிரசார ஊா்தியை கொடியசைத்து துவக்கிவைத்தாா்.

ஈரோடு வேளாண்மை மண்வளம் துணை இயக்குநா் (ஓய்வு) ப.சிதம்பரம், வேளாண்மை அலுவலா் என். ராஜாத்தி, பிரிமியா் இரிகேஷன் நிா்வாக இயக்குநா் ஸ்ரீகந்த் கோயங்கா, குமரகுரு மற்றும் ஜே.கே.கே. வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் கோமதி மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்கள் ரமேஷ்பிரபு மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT