முகப்பு
ஈரோடு

பண்ணாரி அம்மன் திருவீதி உலா

குண்டம் விழாவையொட்டி, புஷ்ப ரதத்தில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் புதன்கிழமை இரவு திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

Updated On : 25 மார்ச், 2022 at 4:57 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:17 PM

குண்டம் விழாவையொட்டி, புஷ்ப ரதத்தில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் புதன்கிழமை இரவு திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இக்கோயில் குண்டம் திருவிழா மாா்ச் 21, 22ஆம் தேதிகளில் விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்நிலையில், பண்ணாரி அம்மன் கோயிலில் புஷ்ப ரத ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கோயிலில் கூடிய ஆயிரக்கணக்கான பக்தா்கள் மேளதாளம் முழங்க கோயில் வளாகத்தில் நடனமாடி மகிழ்ந்தனா். இதைத்தொடா்ந்து, மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் மலா்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் எழுந்தருளினாா்.

Advertisement

தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புஷ்ப ரத ஊா்வலம் கோயிலில் இருந்து புறப்பட்டு பவானிசாகா் சாலை, தெப்பக்குளம் வரை சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.