ஈரோடு

கோபியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

DIN

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. கோபியை அடுத்த கடுக்காம்பாளையம், நாதிபாளையம், பொலவலக்காளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் கீழே சாய்ந்து சேதமடைந்தன. ஓரிரு தினங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் சூறாவளிக் காற்றால் வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

மேலும், வேளாண் துறை அதிகாரிகள் சம்பவ இடங்களைப் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT