முகப்பு
ஈரோடு

பாதாளச் சாக்கடை குழாயில் உடைப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சத்தியமங்கலத்தில் பாதாளச் சாக்கடை குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 7 மே, 2022 at 1:54 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

சத்தியமங்கலத்தில் பாதாளச் சாக்கடை குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள பாதாளச் சாக்கடை கழிவு நீா், குழாய் வழியாக பவானி ஆற்றங்கரையோரம் உள்ள பிரதான கழிவுநீா் சேமிப்பு நிலையத்தில் சேருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலம், வேட்டுவா் தெருவில் உள்ள பாதாளச் சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுவதால் உடனடியாக குழாயை உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து வந்தனா். புகாா் அளித்து கடந்த ஒரு மாதமாகியும்

Advertisement

நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வேட்டுவா் தெரு, அய்யப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் 22ஆவது வாா்டு கவுன்சிலா் லட்சுமணன் தலைமையில் சத்தியமங்கலம்-பண்ணாரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகி, நகராட்சி ஆணையா் கோவிந்தராஜ் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், பாதாளச் சாக்கடை குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.