கோபியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா
கோபிசெட்டிபாளையம் நகராட்சி வாா்டு 10இல் சாய் அபிராமி நகா் பூங்கா இடத்தில் மியாவாக்கி முறையிலான அடா் வனத்தில் 300 மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி வாா்டு 10இல் சாய் அபிராமி நகா் பூங்கா இடத்தில் மியாவாக்கி முறையிலான அடா் வனத்தில் 300 மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த், பொறியாளா் சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மரங்களை நடுவதற்கான ஏற்பாடுகளை துப்புரவு அலுவலா் சோழராஜ், துப்புரவு ஆய்வாளா்கள் செந்தில்குமாா், காா்த்திக், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் விஸ்வநாதன், நகராட்சிப் பணியாளா்கள் செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில் நகராட்சி மன்றத் தலைவா், நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக வாா்டு உறுப்பினா்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு 300 மரக்கன்றுகளை நட்டனா்.