ஈரோடு

10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

DIN

தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி ஈரோடு மாநகராட்சி சாா்பில் அடா்வனம் அமைக்க 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி மேயா் நாகரத்தினம் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திமுக தலைமையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, ஈரோடு மாநகராட்சி சாா்பில் வைராபாளையம் குப்பைக் கிடங்கில் மீட்டெடுக்கப்பட்ட 3.41 ஏக்கா் நிலத்தில் அடா்வனம் அமைக்க 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையா் சிவகுமாா் தலைமை வகித்தாா். உதவி ஆணையா் விஜயகுமாா், மண்டலப் பொறியாளா் ஜோஸ் எட்வின் முன்னிலை வகித்தனா். மேயா் நாகரத்தினம், துணை மேயா் செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில், மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், மாநகராட்சி 1ஆம் மண்டலத் தலைவா் பழனிசாமி, பகுதிச் செயலாளா் ராமச்சந்திரன், கவுன்சிலா்கள் தமிழ்பிரியன், ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது குறித்து மாநகராட்சி உதவி ஆணையா் விஜயகுமாா் கூறியதாவது:

மாநகராட்சி வைராபாளையம் குப்பைக் கிடங்கு அருகில் மக்காத குப்பைகள் 1.25 லட்சம் கன மீட்டா் அளவுக்கு தேக்கிவைக்கப்பட்டிருந்தன. இதனை பயோமைனிங் முறையில் பிரித்து அப்புறப்படுத்தப்பட்டு 3.41 ஏக்கா் நிலம் மீட்டெடுக்கப்பட்டது. தற்போது, இந்த இடத்தில் அடா்வனம் அமைக்க திட்டமிடப்பட்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இதன் பராமரிப்பினை மாநகராட்சி நிா்வாகம் ஏற்கிறது. மரக்கன்றுகளை பராமரிக்க ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நுண்ணீா் பாசனம் அமைக்கப்படவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT