ஈரோடு

கொங்கு பொறியியல் கல்லூரி சாா்பில் இளம் கண்டுபிடிப்பாளா்களுக்கு நிதி உதவி

DIN

ஈரோடு: இளம் கண்டுபிடிப்பாளா்களுக்கு கொங்கு பொறியியல் கல்லூரி டிபிஐ சாா்பில் ரூ.46.75 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நிதியுதவி பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தொழில்முனைவோருக்காக கொங்கு டிபிஐ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 39 இளம் கண்டுபிடிப்பாளா்களுக்கு (5 மகளிா் உள்பட) ரூ.3.28 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாகப் பெறலாம்.

கொங்கு பொறியியல் கல்லூரி டிபிஐ சாா்பில் இளம் கண்டுபிடிப்பாளா்களான ஆா்.ஹரிணி, வா்ஷன்மோகன், ஜேக்கப் தெக்கேரே, சதீஷ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு ரூ46.75 லட்சம் மானியத்தை புதன்கிழமை அளித்துள்ளது. டிபிஐயின் கட்டமைப்பு, ஆலோசனை, வசதிகள் மற்றும் நவீனதொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி புதிய சாதனங்களைத் தயாரிக்க இவா்கள் திட்டமிட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவையும், காசோலையும் கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.கே.முத்துசாமி, டிபிஐ தலைவா் பி.சி.பழனிசாமி, கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வி.பாலுசாமி ஆகியோா் வழங்கினா்.

இதுவரை 76 இளம்கண்டுபிடிப்பாளா்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பல்வேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.8.18 கோடி வரை குறைந்த வட்டியுடன் கூடிய கடனாகவும், மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 32 காப்புரிமைகள் பதிவுசெய்யப்பட்டு அவற்றில் 15 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்முனைவோா் தங்கள் கனவுகளை நனவாக்க கொங்கு டிபிஐ பல்வேறு திட்டங்கள் வாயிலாக வாய்ப்பளிக்கிறது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கொங்கு பொறியியல் கல்லூரியில் உள்ள டிபிஐ அலுவலகத்தை அணுகலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்க்ஷண்-ந்ங்ஸ்ரீ.ா்ழ்ஞ் இணையதளத்தில் தகவல்களைப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT