சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டது.
இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடி கொடிகள் காய்ந்து சருகாகின. இதேபோல் வனப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் தடுப்பணைகளில் நீர் வற்றியதால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வனப்பகுதியில் வறட்சி நீங்கி காய்ந்து கிடந்த மரம் செடி, கொடிகள் துளிர்த்து பச்சை பசேலென பச்சைக் கம்பளம் போர்த்தியது போல் பச்சை பசேல் என அழகாக காட்சி அளிக்கிறது.
வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் மற்றும் வன குட்டைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வன விலங்குகளின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் உள்ள சாலைகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பச்சை பசேலென காட்சியளிக்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியை கண்டு ரசித்து செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.