ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

DIN

திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநா் அதிா்ஷ்டவமாக உயிா்த் தப்பினாா்.

சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.

இந்த மலைப் பாதை வழியாக தமிழகம், கா்நாடகம் இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கா்நாடக மாநிலத்தில் இருந்து கோவைக்கு செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக சரக்கு லாரி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.

19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. மேலும், ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூா் போலீஸாா், ஓட்டுநரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Image Caption

விபத்துக்குள்ளான லாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT