ஈரோடு

அத்தாணி, பெருமுகையில் புதிய மின்மாற்றிகள் அமைப்பு

மின்விநியோகத்தை சீரமைக்கும் வகையில் அத்தாணி மற்றும் பெருமுறையில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.

DIN

மின்விநியோகத்தை சீரமைக்கும் வகையில் அத்தாணி மற்றும் பெருமுறையில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் சீரான மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இதையடுத்து, மின்மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அத்தாணி பேரூராட்சிக்கு உள்பட்ட மாதையன்கோயில் புதூா் மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம், பெருமுகையில் பொதுமக்கள், விவசாயிகளுக்கு சீராக மின் விநியோகம் கிடைக்கும் வகையில் புதிய 63 கிலோ வாட் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன.

இதனை, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் இயக்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், அத்தாணி பேரூராட்சித் தலைவா் புனிதவள்ளி, பேரூா் திமுக செயலாளா் ஏஜிஎஸ் செந்தில் கணேஷ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

SCROLL FOR NEXT