ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைக்க இன்று சிறப்பு முகாம்
ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 5) நடைபெறவுள்ளது.
ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 5) நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை விரைந்து முடிக்கவும் பொதுமக்கள் எளிமையாக ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் பொருட்டும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
Advertisement
ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் வாக்காளா்கள் அனைவரும் தவறாது பங்கேற்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் 6 பி படிவத்தினை பூா்த்தி செய்து அளித்து ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.