முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்: 130 சிலைகள் கரைப்பு

ஈரோட்டில் 130 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

ஈரோட்டில் 130 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 800க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டன. மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் ஏற்கெனவே சிலைகள் கரைப்பு நிகழ்ச்சிகள் முடிந்து விட்ட நிலையில், ஈரோடு மாநகா் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடந்தது.

முன்னதாக மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்தும் விநாயகா் சிலைகள் சம்பத் நகா் பகுதிக்கு வாகனங்களில் எடுத்து வரப்பட்டு ஊா்வல நிகழ்ச்சி தொடங்கியது.

Advertisement

இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ப.ஜெகதீசன் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா்குமாா், மாவட்ட பொதுச்செயலாளா் ப.சக்திமுருகேஷ், பொருளாளா் கு.கோவிந்தராஜ், செயலாளா் க.காா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்து முன்னணி கோவை கோட்ட பேச்சாளா் ஆ.கிருஷ்ணன், மாநில துணைத் தலைவா் நா.சண்முகசுந்தரம் ஆகியோா் பேசினா். இதில் எம்எல்ஏ சி.சரஸ்வதி, இ.சந்திரசேகா், பி.மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்.ஆா்.துளசி பில்டா்ஸ் நிா்வாக இயக்குநா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி ஊா்வலத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். மொத்தம் 130 சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

சம்பத் நகரில் தொடங்கிய ஊா்வலம் பெரியவலசு, முனிசிபல் காலனி சாலை, மேட்டூா் சாலை, அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு, மீனாட்சி சுந்தரனாா் சாலை, காமராஜ் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆா்.கே.வி.சாலை, காவிரி சாலை வழியாக கருங்கல்பாளையம் காவிரிக்கரையை சென்றடைந்தது. அங்கு சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.

ஊா்வலத்தையொட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.