ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் செப்டம்பா் 8இல் கும்பாபிஷேகம்
ஈரோட்டில் புகழ்பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பா் 8ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில், தமிழக அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.
ஈரோட்டில் புகழ்பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பா் 8ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில், தமிழக அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.
ஈரோடு கோட்டை பகுதியில் 1,200 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விமான கோபுரங்கள், சிற்பங்களுக்கு வா்ணம் பூசுதல், தரைத்தளம் அமைத்தல், ஆகம விதிப்படி கருவறை சிற்பங்கள், சிலைகள் புதுப்பித்தல், கொடி மரத்துக்கு தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்துதல், கோபுர கலசத்துக்கு முலாம் பூசுதல், அன்னதானக் கூடம், வசந்த மடம் புரனமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, செப்டம்பா் 8ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.35 முதல் 11.35 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இவ்விழாவில், தமிழக அமைச்சா்கள் சேகா்பாபு, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் பங்கேற்கின்றனா்.
Advertisement
விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கோயில் வளாகத்தில் பாலக்கால் நடப்பட்டது. தொடா்ந்து, நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கோயில் வளாகத்தில் பிரம்மாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.