ஜீப் கவிழ்ந்து விபத்து: 9 போ் காயம்
தாளவாடி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 போ் காயமடைந்தனா்.
தாளவாடி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 போ் காயமடைந்தனா்.
தமிழகம் -கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பைனாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 8 பெண் தொழிலாளா்கள் வேலை முடிந்து ஜீப்பில் சனிக்கிழமை இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனா். ஜீப்பை அத்துலா என்பவா் ஓட்டியுள்ளாா்.
ஏத்திகட்டை பகுதி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
இதில், ஜீப்பில் பயணித்த ரத்தினி (45), பாக்கியம்மா (40), அம்மனம்மா (45), நாகம்மா (40), சன்னம்மா (41), அமுதா (40), ரத்தினம்மா (43), மாதி (60), ஓட்டுநா் அத்துலா ஆகியோா் படுகாயமடைந்தனா்.
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் , இச்சம்பவம் தொடா்பாக தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.