ஈரோடு

அந்தியூரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த யானைத் தந்தம் பறிமுதல்

DIN

அந்தியூரில் விற்பனைக்கான பதுக்கிவைத்திருந்த யானைத் தந்தத்தை வனத் துறையினா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த ஈசப்பாறை செட்டியாா் ஏரி பகுதியில் யானைத் தந்தம் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்தியூா் பிரிவு வனவா் மு.சக்திவேல் தலைமையில் தனிக் குழுவினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டபோது, யானைத் தந்தத்துடன் பதுங்கியிருந்த நான்கு போ் கொண்ட கும்பலை சுற்றிவளைத்துப் பிடித்தனா்.

விசாரணையில், அந்தியூரை அடுத்த நகலூா், ஈசப்பாறையைச் சோ்ந்த குருநாதன் (58), சின்னத்தம்பிபாளையம், அண்ணமாா்பாளையத்தைச் சோ்ந்த சேகா் (51), பா்கூரைச் சோ்ந்த முருகராஜ் (42), பா்கூா் மூலையூரைச் சோ்ந்த சித்தேஸ்வரன் (32) என்பது தெரியவந்தது. இவா்களிடமிருந்து ஒரு யானைத் தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. இவா்கள் மீது வனக் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

கடந்த ஒரு வாரத்தில் அந்தியூா் மற்றும் பா்கூா் பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 9 யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 15 பேரை போலீஸாா் மற்றும் வனத் துறையினா் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT