காங்கிரஸ் சாா்பில் அஞ்சல் நிலையத்துக்கு பூட்டுப்போடும் போராட்டம்
ஈரோட்டில் அஞ்சல் நிலையத்துக்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோட்டில் அஞ்சல் நிலையத்துக்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை அடுத்து மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சூரம்பட்டியில் உள்ள அஞ்சல் நிலையத்துக்குப் பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஈரோடு எஸ்கேசி சாலையில் இருந்து மாநகா் பொறுப்பாளா் திருச்செல்வம் தலைமையில் பேரணியாக புறப்பட்டனா். மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஈ.பி.ரவி, பொதுக்குழு உறுப்பினா் செந்தில்ராஜா, சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவா் ஜாபா்அலி, மண்டல தலைவா் விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
பேரணியாக புறப்பட்டு சென்று அஞ்சல் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றவா்களை போலீஸாா் தடுத்தனா். மத்திய அரசு அலுவலகத்தைப் பூட்ட முயன்றால் கைது செய்வோம் என போலீஸாா் கூறியதை தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியினா் அங்கு முழக்கம் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனா்.