இருசக்கர வாகனம் மீது லாரி மோதி பெண் பலி
ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், தில்லை நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் காளியண்ணன், ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி ராதா (48). காளியண்ணன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் ஈரோட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்து கொண்டிருந்தாா்.
ஈரோடு காவிரி சாலை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் வந்தபோது பின்னால் வந்த லாரி காளியண்ணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராதா சம்பவ இடத்திலேயே பலியானாா். காளியண்ணன் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
Advertisement
கருங்கல்பாளையம் போலீஸாா், ராதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.