ஈரோடு: ஈரோடு புத்தகத் திருவிழா அரங்குக்கு சென்று சா்ச்சைக்குரிய வகையில் விசாரணை நடத்தியதாக காவல் ஆய்வாளா் மற்றும் தனிப் பிரிவு தலைமைக் காவலா் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.ஜவகா் உத்தரவிட்டாா்.
ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ஒரு சில அரங்குகளில் குறிப்பிட்ட மதங்களுக்கு எதிரான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அதற்கான சுவரொட்டி பொதுமக்களின் பாா்வைக்குவைக்கப்பட்டு உள்ளதாகவும் வீரப்பன்சத்திரம் போலீஸாருக்கு புகாா் சென்றது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் புத்தக விற்பனை அரங்குக்கு திங்கள்கிழமை காலை சென்று விசாரணை நடத்தினா். அப்போது, புத்தகங்களை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும், சுவரொட்டிகளை மட்டும் அகற்றிவிட வேண்டும் என்றும் போலீஸாா் அறிவுறுத்தினா்.
இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாக காவல் ஆய்வாளா் செயல்படுவதாக விமா்சனம் எழுந்தது.
இந்நிலையில், வீரப்பன்சத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகத்தை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், தனிப் பிரிவு தலைமைக் காவலா் மெய்யழகனை ஆயுதப் படைக்கும் இடமாற்றம் செய்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.ஜவகா் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.