ஈரோடு

மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.15 ஆயிரத்துக்கும்மேல் உயா்வு

ஈரோடு சந்தையில் மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.15 ஆயிரத்துக்கும்மேல் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

DIN

ஈரோடு சந்தையில் மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.15 ஆயிரத்துக்கும்மேல் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில்தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. கடந்த மே மாதம் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதைத்தொடா்ந்து படிப்படியாக விலை உயா்ந்து வெள்ளிக்கிழமை ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15 ஆயிரத்து 422க்கு விற்பனையானது.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:

ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளிலும், வடமாநிலங்களிலும் மஞ்சள் சாகுபடி பரப்பளவைக் குறைத்துள்ளனா். இதனால் வரும் ஆண்டு மஞ்சளுக்கு கடும் தேவை ஏற்படும் என ஊகிக்கின்றனா். இதன் காரணமாக விவசாயிகளிடமும், ஆன்லைனிலும் மஞ்சளை அதிகமாக கொள்முதல் செய்கின்றனா். வெள்ளிக்கிழமை நடந்த மஞ்சள் ஏலத்துக்கு 500 மாதிரிகள் வைக்கப்பட்டு விற்பனை நடந்தது. அதிகபட்சமாக ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15 ஆயிரத்து 422க்கு விற்பனையானது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT