மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
அந்தியூா் ஒன்றிய திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் ஒன்றிய திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தேரடி திடலில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.எஸ்.குருசாமி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் கே.எஸ்.சரவணன் (அம்மாபேட்டை வடக்கு), சிவபாலன் (டி.என்.பாளையம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், பேச்சாளா்கள் புதுக்கோட்டை விஜயா, தமிழன்பன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், பேரூா் செயலாளா்கள் எஸ்.கே.காளிதாஸ் (அந்தியூா்), ஏ.ஜி.செந்தில்கணேஷ் (அத்தாணி), மாவட்ட சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளா் ஷோபியா சேக், கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.பி.ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement