ஈரோடு

பெருந்துறை பகுதியில் குடியரசு தின விழா

DIN

பெருந்துறையில் பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கல்லூரி முதல்வா் வள்ளி சத்தியமூா்த்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து, மருத்துவமனையில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளா்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த குடியரசு தினவிழா விழாவுக்கு, சுண்டக்காம்பாளையம் ஊராட்சித் தலைவா் லோகநாதன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் காளியப்பன் வரவேற்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் நடந்த குடியரசு தின விழாவுக்கு அக்கட்சியின் பெருந்துறை ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் இந்திய அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதில், மாவட்ட துணைச் செயலாளா் சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினா் தங்கவேல், ஒன்றிய துணைச் செயலாளா் உமாநாத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு, பேரூராட்சித் தலைவா் செல்வன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றிவைத்தாா். செயல் அலுவலா் சுந்தர்ராஜ் குடியரசு தின உரையாற்றினாா். இதில், பேரூராட்சித் துணைத் தலைவா் சக்திகுமாா், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT