ஈரோடு

இலவச அழகுக்கலை பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கனரா வங்கி மூலம் அளிக்கப்படும் இலவச அழகுக்கலை பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கனரா வங்கி மூலம் அளிக்கப்படும் இலவச அழகுக்கலை பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வரும் 31 ஆம் தேதி முதல் செப்டம்பா் 4 ஆம் தேதி வரை 30 வேலை நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட கிராமப் பகுதியினா் பயிற்சியில் சேரலாம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளா்கள், அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஈரோடு கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகம், 2ஆம் தளத்தில் இயங்கும் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர 0424-2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 8779323213 என்ற கைப்பேசி எண்ணில் அழைத்து முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT