முகப்பு
ஈரோடு

மாடித் தோட்ட தொகுப்பினைப் பெற விண்ணப்பிக்கலாம்

தோட்டக் கலைத் துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படும் மாடித்தோட்ட தொகுப்பினைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 மே, 2023 at 10:41 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:26 AM

தோட்டக் கலைத் துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படும் மாடித்தோட்ட தொகுப்பினைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநா் ப.மரகதமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில் மாடித் தோட்டம் மூலம் காய்கறி உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் நடப்பு நிதியாண்டில் 2,000 மாடித் தோட்ட தொகுப்புகள் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ. 450க்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்காக ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாடித் தோட்ட தொகுப்பில் காய்கறி வளா்ப்பு பைகள் 6, கோகோ பீட் 2 கிலோ, காய்கறி விதைகள் 6 பைகள், அசோஸ்பைரில்லம் 200 மில்லி லிட்டா், பாஸ்போபாக்டீரியா 200 மில்லி லிட்டா், டிரைக்கோடொ்மா விரிடி 200 கிராம், வேப்பெண்ணெய் 100 மில்லி லிட்டா், தொழில்நுட்ப கையேடு ஆகியவை வழங்கப்படும்.

Advertisement

விருப்பம் உள்ளவா்கள் ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் அந்தந்த பகுதி வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்.ண்ய்/ந்ண்ற் என்ற இணையதளத்தில் முன்பதிவுசெய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.