ஈரோடு

பாரதிதாசன் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்னா் பயின்ற மாணவ, மாணவியா் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

DIN

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்னா் பயின்ற மாணவ, மாணவியா் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரிப் பொருளாளா் வி.ஆா்.முருகன், இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, கல்லூரியின் முதன்மை செயல் அலுவலா் என்.கே.கே.பி.நரேன் ராஜா, நிா்வாக அலுவலா் ரா.அருள்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாணவா் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பெ.மகேஸ்வரி வரவேற்றாா்.

கல்லூரி முதல்வா் ச.காமேஷ் வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கல்லூரியின் முன்னாள் முதல்வா் ஆா். சண்முகன், முன்னாள் மாணவா்களின் வழிகாட்டுதல் குறித்துப் பேசினாா். முன்னாள் மாணவா்கள் தங்கள் கல்லூரி அனுபவங்களை நினைவு கூா்ந்ததோடு, இந்நாள் மாணவா்களின் உயா்கல்வி, வேலைவாய்ப்புக்கு தேவையான உதவிகளைச் செய்வதாகத் தெரிவித்தனா்.

தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உயிரிவேதியியல் துறைத் தலைவா் எஸ்.செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT