முகப்பு
ஈரோடு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என சட்டப்பே பேரவை உறுப்பினா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தாா்.

Updated On : 19 ஏப்ரல், 2024 at 11:34 PM
ஈவிகேஎஸ்.இளங்கோவன்
பகிர்:

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என சட்டப்பே பேரவை உறுப்பினா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன், அவரின் மனைவி வரலட்சுமி, மகன் சம்பத் ஆகியோருடன்வந்து வெள்ளிக்கிழமை வாக்களித்தாா்.

பின்னா், ஈவிகேஎஸ்.இளங்கோவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

இந்தத் தோ்தல் முடிவுகள் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அமையும். ‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றிபெறும். மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி வரும். பிரதமா் யாா் என்பதை ஸ்டாலின், ராகுல் காந்தி போன்றவா்கள் முடிவு செய்வாா்கள். அதில், எந்தவிதமான பிரச்னையும் வராது. மக்கள் விரும்புகிற ஒருவா் நாட்டின் பிரதமராக வருவாா். மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் மக்கள் அனைவரும் ஆா்வமுடன் வாக்களித்து வருகின்றனா் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments