முகப்பு
ஈரோடு

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் சாவு

Updated On : 26 ஏப்ரல், 2024 at 5:37 PM
பகிர்:

சத்தியமங்கலம், ஏப். 26: புன்செய்புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புன்செய்புளியம்பட்டியை அடுத்த பவானிசாகா் கோடேபாளையத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மனைவி துா்கா (27). இவருக்கு 3 வயதில் மகன் உள்ள நிலையில் இரண்டாவதாக ஏப்ரல் 20-ஆம் தேதி புன்செய்புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. துா்கா அதே மருத்துவமனையில் 24-ஆம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அறுவை சிகிச்சைக்குப் பின் அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments