ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.86 லட்சம்

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.83 லட்சத்து 86 ஆயிரத்து 493 ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

Din

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.83 லட்சத்து 86 ஆயிரத்து 493 ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்தக் கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்படும்.

அதன்படி இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையா் மேனகா, பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் சுவாமிநாதன், ஆய்வா் சிவமணி, பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் ரூ. 83 லட்சத்து 86 ஆயிரத்து 493 ரொக்கம், 336 கிராம் தங்கம், 945 கிராம் வெள்ளி, வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிப் பணியாளா்கள், கோயில் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT