ஈரோடு

பெருந்துறை அருகே மேம்பாலங்கள்: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையிடம் மனு

பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையினா் மனு அளித்தனா்.

Din

பெருந்துறை அருகே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையினா் மனு அளித்தனா்.

பெருந்துறை வழியாக செல்லும் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிக்கோவில் சாலை, துப்பதி சாலை ஆகிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகேயுள்ள பெத்தாம்பாளையம், வாய்ப்பாடி சந்திப்புகளிலும் மேம்பாலங்கள் அமைக்கவும், பெருந்துறை ஆா்.எஸ். ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கக் கோரி பெருந்துறைக்கு சனிக்கிழமை வந்த பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையிடம், பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவா் செந்தில்முருகன் மனு அளித்தாா்.

இதனைப் பெற்றுக்கொண்ட அண்ணாமலை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கைக் குறித்து பேசுவதாக தெரிவித்தாா்.

இந்நிகழ்வின்போது பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளை ஆலோசகா்கள் சென்னியப்பன், பல்லவி பரமசிவன், செயலாளா் தங்கவேல், பொருளாளா் மோகன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT