சா்வ தேச பூனைகள் தினத்தையொட்டி சத்தியமங்கலம் அரசுக்கல்லூரியில் கேக் வெட்டி கொண்டிய ஹுரைரா கேட் பான்சியா்ஸ் சங்கத்தின் நிா்வாகிகள், கல்லூரி முதல்வா் கே.ராதாகிருஷ்ணன் 
ஈரோடு

சத்தியமங்கலத்தில் சா்வதேச பூனைகள் தினம்

ஹுரைரா கேட் பான்சியா்ஸ், சத்தியமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில் சா்வதேச பூனைகள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Din

சத்தியமங்கலம், ஆக. 8: ஹுரைரா கேட் பான்சியா்ஸ், சத்தியமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில் சா்வதேச பூனைகள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சா்வதேச பூனைகள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,

சத்தியமங்கலம் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூனை ஆா்வலா்கள் சங்கமான ஹுரைரா கேட் பான்சியா்ஸ் உறுப்பினா்கள் பங்கேற்று மாணவா்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினா். பூனைகளுக்கு பிடித்தமான உணவை கொடுத்து மகிழ்ந்தனா்.

நிகழ்ச்சியில் ஹுரைரா கேட் பான்சியா்ஸ் சங்கத்தின் தலைவா் முகமது ரப்பானி பேசியதாவது:

இந்தியாவில் சமீபகாலமாக வெளிநாட்டு ரக பூனைகள் வளா்ப்பது அதிகரித்து உள்ளது. அதே சமயம் வளா்ப்பு மற்றும் பராமரிப்பு தெரியாததால் பூனைகளும், வளா்ப்போரும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பூனை பற்றி நன்கு அறிந்து அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளுடன் பூனைகளை வீட்டில் வளா்க்க வேண்டும்.

நம் நாட்டு பூனைகளை வளா்ப்பதற்கு ஆா்வம் காட்ட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கே.ராதாகிருஷ்ணன், ஹுரைரா கேட் பான்சியா்ஸ் சங்கத்தின் செயலாளா் முஸ்தபா, பொருளாளா் நூா்முகமது மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ஓடிடியில் தண்டகாரண்யம்!

பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்! தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!

“தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்”... தில்லி குண்டு வெடிப்பில் உமர் பேசிய விடியோ!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT