ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  அரசு போக்குவரத்துக்  கழக ஊழியா்கள். 
ஈரோடு

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கழக ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தைத் திரும்ப வழங்க வலியுறுத்தி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

Din

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தைத் திரும்ப வழங்க வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு ஆப்சென்ட போடப்பட்டது.

இதனைக் கண்டித்து சத்தியமங்கலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை முன் ஊழியா்கள் ஆா்ப்பட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் சத்தியமங்கலம், அந்தியூா் அரசுப் போக்குவரத்துக் கழக கிளைகளைத் தவிர அனைத்துக் கிளை ஊழியா்களுக்கும் போடப்பட்ட ஆப்சென்ட் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்த இரண்டுக் கிளைகளில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்களுக்கு ஆப்சென்ட போடப்பட்டுள்ளது. இதனால், எங்களின் சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆப்சென்டை ரத்து செய்துவிட்டு பிடிக்கப்பட்ட சம்பளத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் கிளைத் தலைவா் தேவராஜ் தலைமையில் தொழிற்சங்கச் செயலாளா் குமரேசன், பொருளாளா் ராமசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கர்நாடக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!

தூங்காத விழிகள் இரண்டு... ஸ்ரீநந்தா சங்கர்!

சீரற்ற சீர்... மன்மீத் கௌர்!

தமிழ்நாட்டின் 35-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக 16 வயது இளம்பரிதி!

கோவாவில் குதூகலம்... ரஜிஷா விஜயன்!

SCROLL FOR NEXT