ஈரோடு

சிவகிரியில் ரூ.42.33 லட்சத்துக்கு எள் ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42.33 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Din

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42.33 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 416 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

இதில், கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.140.89-க்கும், அதிகபட்சமாக ரூ.159.89-க்கும், சராசரியாக ரூ.148.69 -க்கும் விற்பனையானது. சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.101.49-க்கும், அதிகபட்சமாக ரூ.153.63-க்கும், சராசரியாக ரூ.138.99-க்கும் ஏலம்போனது.

மொத்தம் 30,935 கிலோ எடையுள்ள எள் ரூ. 42 லட்சத்து 33 ஆயிரத்து 832-க்கு விற்பனையானது.

மைலம்பாடியில்...

பவானி அருகேயுள்ள மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.34 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. 89 மூட்டை எள்ளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், வெள்ளை ரகம் கிலோ ரூ.90.09 முதல் ரூ.142.50 வரையும், கருப்பு ரகம் ரூ.150.69 முதல் ரூ.159.19 வரையும், சிவப்பு ரகம் ரூ.109.99 முதல் ரூ.141.49 வரையும் ஏலம்போனது. மொத்தம் 6,542 கிலோ எள் ரூ.9,34,832-க்கு விற்பனையானது. 15 மூட்டை தேங்காய் பருப்பு, கிலோ ரூ.73.89 முதல் ரூ.99.75 வரையில் ரூ.32,102-க்கு ஏலம்போனது.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT