முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ. 1.72 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. ஒரு கோடியே 72 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு

பெருந்துறையில் ரூ. 1.72 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. ஒரு கோடியே 72 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 8:06 PM
பகிர்:

பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. ஒரு கோடியே 72 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,775 மூட்டைகளில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 500 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 93.99-க்கும், அதிகபட்சமாக, ரூ. 104.19-க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 35.99-க்கும், அதிகபட்சமாக ரூ. 99.89-க்கும் விற்பனையாயின. மொத்தம், ரூ. ஒரு கோடியே 72 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →