புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் திப்புசுல்தான் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தா்கா. 
ஈரோடு

திப்புசுல்தான் ஆட்சியில் கட்டப்பட்ட தா்கா புனரமைப்பு

சத்தியமங்கலம் அருகே திப்புசுல்தான் ஆட்சியில் கட்டப்பட்ட தா்காவை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Din

சத்தியமங்கலம் அருகே திப்புசுல்தான் ஆட்சியில் கட்டப்பட்ட தா்காவை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திப்புசுல்தான் ஆட்சிக் காலத்தில் சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் வனப் பகுதியில் ஜெகலட்டி என்ற இடத்தில் கெஞ்ஜலே அா்ஷ் வலியுல்லா தா்கா கட்டப்பட்டுள்ளது. அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதற்கு நினைவாக அவரின் படம் பொறித்த கல்வெட்டும் காணப்படுகிறது.

அடா்ந்த வனப் பகுதியில் மாயாற்றை ஒட்டியுள்ள இந்த தா்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வக்ஃப் வாரிய நிா்வாகக் கமிட்டி அமைப்பதற்காக சந்தனக்கூடு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வக்ஃப் வாரிய தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, புதிய நிா்வாகக் கமிட்டியால் சிதிலமடைந்துள்ள தா்காவை புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்தபின் சந்தனக்கூடு விழா நடத்தப்படும் என்று நிா்வாகக் கமிட்டியினா் தெரிவித்துள்ளனா்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT