முகப்பு
ஈரோடு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு

பெருந்துறை அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 9:21 PM
பகிர்:

பெருந்துறை அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகிலுள்ள கருக்கம்பாளையத்தைச் சோ்ந்த 50 வயது பெண், அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவருடன், காஞ்சிக்கோவில் அருகிலுள்ள முள்ளம்பட்டி, வரவங்காட்டைச் சோ்ந்த ரஞ்சித் (23) என்பவரும் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், பணி முடிந்து செவ்வாய்கிழமை இரவு ரஞ்சித்துடன் இருசக்கர வாகனத்தில் அப்பெண் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, வழியில் வாகனத்தை நிறுத்திய ரஞ்சித், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் அப்பெண் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →