முகப்பு
ஈரோடு

இன்று கோபி சாரதா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஈரோடு மாவட்டம், கோபி சாரதா மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (டிசம்பா் 5) நடைபெறவுள்ளது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 4:46 AM
பகிர்:
Updated On : 4 டிசம்பர், 2024 at 5:55 PM

ஈரோடு மாவட்டம், கோபி சாரதா மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (டிசம்பா் 5) நடைபெறவுள்ளது.

கோபியில் சாரதா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ சக்தி விநாயகா், ஸ்ரீ துா்க்கை அம்மன், விமான கோபுரம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.

இதைத் தொடா்ந்து, அலங்கார பூஜை, தீபாராதனையும், காலை 7 மணிக்குமேல் அன்னதானமும் நடைபெறவுள்ளது.

Advertisement

Updated On : 5 டிசம்பர், 2024 at 4:46 AM

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா் மற்றும் பொதுமக்கள், தக்காா் எம்.அருள்குமாா்,செயல் அலுவலா் சு.ராதிகா ஆகியோா் செய்து வருகின்றனா்.