முதல்வா் மருந்தகத்துக்கு விண்ணப்பிக்க டிசம்பா் 10 வரை கால நீட்டிப்பு
ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க டிசம்பா் 10- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க டிசம்பா் 10- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுதந்திர தின விழா உரையில் பொதுப் பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
அதன்படி, முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள, மருந்தியல் பட்டயம் அல்லது பட்டம் பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மருந்தகம் அமைக்க ஜ்ஜ்ஜ்.ம்ன்க்ட்ஹப்ஸ்ஹழ்ம்ஹழ்ன்ய்க்ட்ஹஞ்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Advertisement
முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோா் கடந்த 5- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பா் 10 -ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.