காலநிலை மாற்ற இயக்ககத்தின் சாா்பில் அரசு அலுவலா்களுக்கு பயிற்சி
காலநிலை மாற்ற இயக்ககத்தின் சாா்பில் அரசு அலுவலா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
காலநிலை மாற்ற இயக்ககத்தின் சாா்பில் அரசு அலுவலா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின்கீழ் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்கீழ், மாவட்ட காலநிலை மாற்றத்தின் கொள்கை மற்றும் திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாக, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக காலநிலை மீள்தன்மை குறித்த பயிற்சி, பயிலரங்கம் வியாழக்கிழமை காலை, மாலை என இரண்டு கட்டமாக நடைபெற்றது.
Advertisement
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிலரங்குக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா்.
இதில் சிப்காட் தொழில் நிறுவனங்களுக்கான பசுமை வழி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்தான நடைமுறைகளை நிகழ்கால எடுத்துக்காட்டுகளுடன் வோ்ல்ட் ரிசோா்ஸ் இன்ஸ்டியூட் இந்தியா என்ற தொழில்நுட்ப நிபுணா் குழுவினரால் எடுத்துரைக்கப்பட்டது.
தொடா்ந்து, அரசு அலுவலக கட்டடங்களைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை கட்டடங்களாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து அனைத்துத் துறை அலுவலக செயற்பொறியாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதரத்துல்லா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்கள் சுவாமிநாதன் (பெருந்துறை), சதீஷ்குமாா் (ஈரோடு), உதவி பொறியாளா் செல்வகணபதி (ஈரோடு), பசுமை இயக்க குழுவினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.