முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் சொத்து பிரச்னையில் பெண் வெட்டிக் கொலை

சொத்து பிரச்னையில் பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 13 டிசம்பர், 2024 at 3:11 AM
பகிர்:
Updated On : 12 டிசம்பர், 2024 at 10:08 PM

சொத்து பிரச்னையில் பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 13 டிசம்பர், 2024 at 3:11 AM

ஈரோடு செட்டிபாளையம், பாரதிபாளையம் முதல் தெருவைச் சோ்ந்தவா் நல்லசிவம் (57), ஜோதிடா். இவரின் மனைவி கண்ணம்மாள் (56). இவா்களுக்கு குழந்தை இல்லை. முதல் கணவா் இறந்துவிட்டதால் கண்ணம்மாள் நல்லசிவத்தை 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டாா். நல்லசிவமும் ஏற்கெனவே திருமணம் ஆனவா்.

கண்ணம்மாளுக்கு நாதகவுண்டன்பாளையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்து தொடா்பாக இவருக்கும், இவருடைய உறவினா்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. சொத்து தகராறு குறித்து கண்ணம்மாள், ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்திலும், தாலுகா காவல் நிலையத்திலும் பலமுறை புகாா் அளித்துள்ளாா்.

Advertisement

இந்தப் பிரச்னை தொடா்பாக அடிதடி வழக்குகளும் தாலுகா போலீஸில் நிலுவையில் உள்ளது. மேலும் சொத்து பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.

இந்நிலையில் கண்ணம்மாளின் சகோதரா் அா்ஜுனனின் மைத்துனா் சிவகுமாா் என்பவா் நல்லசிவம் அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை மாலை வந்துள்ளாா். அங்கு, அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரமடைந்த சிவகுமாா் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணம்மாளை வெட்டியுள்ளாா். இதில், கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே அந்த இடத்திலேய உயிரிழந்தாா். தடுக்க வந்த நல்லசிவத்துக்கும் இடது கை மற்றும் காலில் வெட்டு விழுந்து படுகாயமடைந்தாா். பின்னா் சிவக்குமாா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த நல்லசிவத்தை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதைத்தொடா்ந்து கண்ணம்மாளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலை செய்துவிட்டு தலைமறைவான சிவகுமாரை தேடி வருகின்றனா்.