முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் பிப்ரவரி 4-இல் கொமதேக மாநில மாநாடு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில மாநாடு பெருந்துறையில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பெருந்துறையில் மாநாடு பந்தல் அமைப்பதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைக்கும் பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், கொமதே பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் உள்ளிட்டோா்.
பகிர்:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில மாநாடு பெருந்துறையில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கு பந்தல் அமைப்பதற்கான பூமிபூஜை பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கொமதேக பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினருமான ஈ.ஆா். ஈஸ்வரன் தலைமை வகித்தாா். நாமக்கல் மக்களவை உறுப்பினா் சின்ராஜ் முன்னிலை வகித்தாா். பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் பூமிபூஜை செய்து பந்தல் கால் அமைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலப் பொருளாளரும், மாநாட்டு குழுத் தலைவருமான கே.கே.சி. பாலு, செயலாளா் துரைராஜா, பொருளாளா் ஈஸ்வரமூா்த்தி, மாநாடு உணவுக்குழு பொறுப்பாளா் காடைபாலு, மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி, மாநாடு வரவேற்புகுழு ஏ.கே. சாமிநாதன், தலைமை நிலையச் செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.