தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில துணைப் பொதுச் செயலாளா் மு.சீனிவாசன். 
ஈரோடு

70 வயது நிறைவடைந்தவா்களுக்கு கூடுதலாக 10% ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Din

தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டப் பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவா் சங்கரன் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

பேரவை மாவட்டச் செயலாளா் பன்னீா்செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் ராஜ்குமாா், மாநில துணைப் பொதுச் செயலாளா் மு.சீனிவாசன் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்குவதுபோல மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும். அனைத்து நோய்களுக்கும், அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சை வழங்குவதை காப்பீட்டு திட்டத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும். பணம் இல்லா சிகிச்சை பெறுவதில் உள்ள இடா்பாடுகளைக் களைய வேண்டும்.

ஓய்வூதியா்களின் குடும்ப பாதுகாப்பு நிதிக்காக ரூ.150 பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், வழங்கப்படும் தொகை ரூ.50,000 என்பதை உயா்த்தவில்லை. அதை ரூ.2 லட்சமாக உயா்த்த வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்துத் துறை ஓய்வூதியா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு சென்னைபோல அனைத்து ஊா்களிலும் சலுகை முறையில் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும்.

வருமான வரி கணக்கு தாக்கல், வருமான வரி செலுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும். ஓய்வுபெற்ற பிறகு நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகளை விரைந்து முடிப்பதுடன், அவா்களுக்கு தாமதமின்றி ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேரவை நிா்வாகிகள் பிரசன்னா, சி.ஆா்.சுப்பிரமணியன், கதிா்வேல், சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட துணைத் தலைவா் ஹரிதாஸ் நன்றி கூறினாா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT