முகப்பு
ஈரோடு

சென்னிமலை அருகே வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

Updated On : 13 ஜூன், 2024 at 9:53 PM
பகிர்:

பெருந்துறை, ஜூன் 13: சென்னிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது.

சென்னிமலை வனப் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன. இவை இறை தேடியும், இடமாற்றத்துக்காகவும் பல்வேறு இடங்களுக்கு இரவு நேரத்தில் கூட்டமாக பயணிப்பது உண்டு.

இந்நிலையில், சென்னிலை, பெருந்துறை சாலையில், எம்.பி.என். காலனிமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டரை வயதான ஆண் புள்ளி மான் இறந்துகிடந்தது.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் சென்னிமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மற்றும் சென்னிமலை வனத் துறையினா் இறந்த புள்ளி மானை மீட்டு வனத்தில் புதைத்தனா்.